ஈரானில் 25 மில்லியன் மக்களுக்கு கொரோனா பாதிப்பு.! அதிபர் ஹசன் ரவ்கானி.!

25 மில்லியன் ஈரானியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிபர் ஹசன் ரவ்கானி தெரிவித்தார்.

ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரவ்கானி தொலைக்காட்சியில்  உரையாற்றும் போது, 25 மில்லியன் ஈரானியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 30 முதல் 35 மில்லியன் வரை ஈரானியர்கள் ஆபத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

சுமார் 14,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 200,000 -க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரவ்கானி உரையில் கூறினார். ஆனால், சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,69,440 உள்ளது.

இந்நிலையில், சுகாதார அமைச்சகத்தை விட பல மடங்கு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஈரான், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடாக தற்போது  இருந்து வருகிறது என்பது குறிப்பித்தக்கது.

author avatar
murugan