குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த 5 வைட்டமின்களும் மிகவும் அவசியம்!
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த 5 வைட்டமின்களும் மிகவும் அவசியம்.
பெற்றோர்களை பொறுத்தவரையில், தங்களது குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை செலுத்துவதுண்டு. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படுவது, வைட்டமின்கள் தான். குழந்தைகளுக்கு நாம் வைட்டமின் நிறைந்த உணவுகளை சரியாக கொடுக்காத பட்சத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியில் பாதிப்பு
ஏற்படக்கூசும்.தற்போது இந்த பதிவில், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு எந்தெந்த வைட்டமின்கள் மிகவும் அவசியம் என்பது பற்றி பார்ப்போம்.
வைட்டமின் ஏ
முருங்கைக்கீரை, காய்கறிங்கள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின்கள் குறைவாக காணப்படும் பட்சத்தில், கண் பார்வையில் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் எலும்பு மற்றும் பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வைட்டமின் பி
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த சத்துக்கள் குறைவுபடும் பட்சத்தில், குழந்தைகளுக்கு வயிற்று மந்தம், அஜிர கோளாறு, ரத்த சோகை, பக்கவாதம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.
வைட்டமின் சி
ஆரஞ்சுப்பழம், சமைக்காத பச்சை காய்கறிகள், திராஞ்ச்சை, நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யாக்கா, உருளை பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. இந்த வைட்டமின்கள் குறையும் பட்சத்தில், தோற்றத்தில் கடினமான குணமுடையவாறாக இருப்பர், எலும்பு மற்றும் பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
வைட்டமின் டி
குழந்தைக்கு போதுமான அளவு சூரிய ஒளி கிடைத்தாலே, குழந்தையின் உடலே தானாக வைட்டமின் தி-யை தயார் செய்து கொள்ளும். மேலும்,முட்டை மீன் மற்றும் வெண்ணெய் போன்ற உணவுகளிலும் இந்த சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் குறைவுபடும் பட்சத்தில், எலும்புகள் வலுவிழக்கக்கூடும். கை மற்றும் கால்கள் வில் போன்று வளையக்கூடும்.
வைட்டமின் ஈ
கோதுமை, கீரை, பச்சை காய்கறிகளில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் சத்துக்கள் குறைவுபடும் பட்சத்தில், தசைகள் பலவீனமடையும். இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.