சாத்தான்குளம் கொலை வழக்கு ! 2 நாட்களில் அறிக்கை தாக்கல் -மனித உரிமைகள் ஆணையம்
சாத்தான்குளம் கொலை வழக்கில் 2 நாட்களில் அறிக்கை தாக்கல் என்று மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா.,எஸ்.எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடந்தி வருகிறது.மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இன்று இந்த வழக்கில் சிறையில் உள்ள 10 காவலர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் விசாரணை நடத்தினார் .தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.இதன் பின் மாநில மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் ,காவலர்கள் அளித்த வாக்குமூலம் ஒத்துப்போனது.2 நாட்களில் இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.