ஊரடங்கை மீறி செய்தியாளர்களை சந்தித்த காங்.எம்.பி கார்த்திக் உட்பட 50 பேர் மீது வழக்கு!
ஊரடங்கு விதிகளை மீறி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸின் எம்.பி கார்த்திக் சிதம்பரம் உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட்டமாக இருப்பதற்கு அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடுரோட்டில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆம்பூரில் காங்கிரஸின் எம் பி கார்த்திக் சிதம்பரம் அவர்களும் 50 பேர் கொண்ட கூட்டமும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளது. எனவே இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.