ஆமாஞ்சாமி அடிமை அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது -உதயநிதி ஸ்டாலின்

Default Image

ஆமாஞ்சாமி அடிமை அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம்  சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு  செய்ததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பெரியாரின் சிந்தனைகளை வெல்ல முடியாத கோழைகள் இருட்டில் அவர் சிலையோடு மோதுவதும், அதனை ஆமாஞ்சாமி அடிமை அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது. மனிதக்குலம் மானமும், அறிவும் பெற உழைத்த பெரியாரைச் சீண்டுவதைச் சூழ்ச்சியால் வயிறு கழுவும் கும்பல் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வள்ளுவர்-அம்பேத்கரை தனதாக்கும் முயற்சி, நோட்டாவிடம் போட்டி என தொடர் தோல்விக்கு பெரியாரே காரணம் என்பதால் அவரின் சிலையை அவமதித்துள்ளனர். ஈராயிரம் ஆண்டுகால சமூக அழுக்கை வெளுத்தெடுத்தவர் மறைந்தும் உங்களை நிம்மதியிழக்க செய்கிறார் என்பதில் அடங்கியுள்ளது அவரின் வெற்றி எங்களின் வரலாறு என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்