#அறக்கட்டளை அறிவிப்பு- துவங்குகிறது பணி! இன்று முக்கிய முடிவு?!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்படுவதாக ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இது குறித்து ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்படும் மேலும் அது என்றைய தேதி என்பது குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.மேலும் கோவில் கட்டுமான பணி துவக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதே போல ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் போன்ற தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எனது அழைப்பை ஏற்று பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று நம்புகிறேன். கோவில் கட்டுமான பணி துவக்க விழாவை ஆன்லைனிலோ அல்லது வீடியோ கான்பரன்சிங் முறையிலோ நடத்த விரும்பவில்லை. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் நேரிடையாக வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.