மும்பை கட்டிட விபத்து.!உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு.!
மும்பையில் தொடர்ந்து சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், மும்பையில் துறைமுக பகுதியில் உள்ள பானுஷாலி என்ற 5 கட்டிடத்தில் ஒரு பகுதி நேற்று முன்தினம் கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் கட்டிடத்தில் இருந்த பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 2 பேர் பலியாகி , 2 பேர் காயம் அடைந்தனர். நேற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியை தொடர்ந்தனர்.
இந்த விபத்தில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது என கூறப்படுகிறது.