கொரோனா மையத்தில் பெண் பாலியல் வன்கொடுமை.! கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா.!
நவி மும்பையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 40 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா போலீசார் தெரிவித்தனர்.
நவி மும்பையில் பெண் ஒருவர் கொரோனா என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்துள்ளார். அந்த மையத்தில் இருந்த மற்றோருவரின் சகோதரர் பார்வையாளராக வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணை மையத்தில் வைத்து அந்த நபர் , சந்தித்து ஏதாவது தேவையா..? என கேட்டுள்ளார்.
உதவி வழங்குவதன் மூலம் அந்த பெண்ணிடம் நட்பை வளர்த்து கொண்டார். இந்நிலையில், கடந்த கடந்த வியாழக்கிழமை இரவு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பன்வேல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த நபரை கைது செய்தனர்.
அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும், கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு கொரோனா இருப்பது என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.