பணத்திற்காக மனைவியை வைத்து சூதாடி தோல்வி: மாறி மாறி கற்பழித்து வெறி தீர்த்த கொடூரம்!
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஒருவர் தனது மனைவியை வைத்து சூதாடியுள்ளார். இதில் அவர் தோல்வியடைந்ததையடுத்து, வெற்றி பெற்றவர்கள் அவரின் மனைவியை பலாத்காரம் செய்து தங்கள் வெறியை தீர்த்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய பொதுமக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் ஒரு பெண் கற்பழிப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சில நாட்களுக்கு முன்னர் எனது கணவர் என்னை வைத்து இரண்டு பேருடன் சூதாடியுள்ளார். இந்த சூதாட்டத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
இதனையடுத்து சூதாட்டத்தில் வெற்றி பெற்ற அந்த இரண்டு நபரும் வந்து என்னை கற்பழித்தனர். சூதாட்டத்தில் உனது கணவரிடம் இருந்து உன்னை வெற்றியாக பெற்றுவிட்டோம் என கூறி அவர்கள் தொடர்ந்து என்னை பலாத்காரம் செய்து வந்தனர்.
இதனால் எனது கணவரை பிரிந்து நான் வாழ்ந்து வந்தேன். ஆனாலும் அந்த நபர்கள் என்னை விடாமல் தொடர்ந்து பலாத்காரம் செய்து வருகின்றனர் என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் புகாருக்கு பதில் அளிக்குமாறு சம்மந்தப்பட்ட நபர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.