கொரோனா அச்சத்தால் 103 வயது மூதாட்டியை விரட்டும் ஊர்மக்கள்!
கொரோனா அச்சத்தால் 103 வயது மூதாட்டியை விரட்டும் ஊர்மக்கள்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. இதனால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் நரியம்பேட்டையில், பீவி என்ற 103 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் இந்த மூத்தஅத்தியால் தங்களுக்கும் கொரோனா வந்துவிடும் என பயந்து, அவரை ஊரை விட்டு போக சொல்லி துன்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து, அந்த மூதாட்டி இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.