நாசா விண்வெளி மையம் மக்களிடம் கோரிக்கை.!

Default Image

மேகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மக்களிடம் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாசா விண்வெளி மையம் ’Earth Radiant Energy System’ என்ற செயற்கைக்கோளை விண்ணில் அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள், தொடர்ந்து மேகங்களை ஆராய்ந்து காலநிலை எப்படி மாறும் என்று குறிப்பிடும்.இந்த செயற்கைக்கோள் காலநிலை மாற்றத்தை கண்டுபிடிக்க அனுப்பப்பட்டது.

மேலும் அமெரிக்கா மட்டுமல்லாமல் பூமி முழுவதும் தென்படும் மேகங்களை இந்த செயற்கைகோள் ஆராயும்.

ஆனால், இதில் பிரச்சனை என்னவென்றால் மேகங்கள், புகை மற்றும் பனி ஆகியவற்றுக்கான வித்தியாசங்களை இந்த செயற்கைகோளால் அறிய முடியவில்லை.

இதன் காரணமாக செயற்கைகோள் அனுப்பும் ஆராய்ச்சி முடிவுகளில், சில சமயம் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குறைபாட்டினை சரி செய்ய நாசா மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது.

அதன்படி, மக்களை மேகங்களின் புகைப்படத்தை எடுத்து அனுப்புமாறு நாசா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அவ்வாறு மக்களால் அனுப்பப்படும் புகைப்படங்கள், எந்த பகுதியில் எடுத்தது என்றும் நாசாவிற்கு தெரிவிக்க வேண்டும்.

செயற்கைகோள் அனுப்பிய புகைப்படத்தையும், மக்கள் அனுப்பும் புகைப்படத்தையும் வைத்து நாசா சோதனை செய்து கொள்ளும். இதற்காக, ’Globe Observer‘ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்