அத்திக்கடவு -அவிநாசி திட்டம் 30% நிறைவு – முதலமைச்சர் பழனிசாமி
அத்திக்கடவு -அவிநாசி திட்டம் 30% நிறைவடைந்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஈரோட்டில் ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. ரூ.97.85 கோடி மதிப்பிலான 15க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.இதன் பின் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தேவையான உபகரணங்கள் கையிருப்பிலுள்ளது.அத்திக்கடவு -அவிநாசி திட்டம் 30% நிறைவடைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது .சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணி துவங்கியுள்ளது.ரோடு பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கீழ்பவானி கால்வாயை ரூ.985 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கோபிச்செட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.ஈரோடு -சித்தோடு 4 வழிச்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.