காண்டான ஹெச்.ராஜா ? இந்து விரோத செயல்..
ஹெச்.ராஜா விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரையை எதிர்ப்பது அப்பட்டமான இந்து விரோத செயலாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் ரத யாத்திரை தொடங்கியது. ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வந்த ரத்த யாத்திரை இன்று தமிழகத்துக்கு நுழைகிறது.
இந்த ரத யாத்திரைக்கு தமிழகத்தில் மிகப் பெரிய எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்நிலையில், இன்று கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி வழியாக ரத யாத்திரை செல்லவிருக்கிறது. இந்த ரத யாத்திரையை எதிர்த்து பல அமைப்புகள் போராட்டம் நடத்த இருக்கின்றன. இதன் காரணமாக தென்காசி, செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
பாஜக வின் தேசிய செயாலாளரான எச்.ராஜா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து தமிழகம் வரும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை எதிர்ப்பது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். இந்துக்கள் திரளான எண்ணிக்கையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.