ஆந்திரா எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு படமாகிறது !
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் எப்படியோ அதே போல ஆந்திராவில் கலக்கி முதல்வரானவர் நடிகர் என்.டி.ஆர்.
அவரது வாழ்க்கையில் 2வது மனைவியாக வந்த லட்சுமி பார்வதியால் பல்வேறு அதிர்ச்சி தரும் திருப்பங்கள் நிகழ்ந்தது. பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய இவரது வாழ்க்கை சரித்திரத்தை படமாக்கவிருப்பதாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த வருடம் அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டார்.
இப்படத்தை தயாரிக்க எவரும் முன்வராத நிலையில் அரசியல்வாதி ஒருவர் தயாரிக்க முன்வந்திருப்பதாக இயக்குனர் தெரிவித்தார். தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து வர்மாவே மற்றொரு டுவிட்டில் குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகரின் தயாரிப்பில் லட்சுமி பார்வதி படத்தை இயக்கவில்லை என தெரிவித்தார்.
அதே நேரம் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படம் தயாராகி வருகிறது. இதில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.