தமிழக அமைச்சரவையிலும் பா.ஜ.க இடம்பெறும் – பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன்
தமிழக அமைச்சரவையிலும் பா.ஜ.க இடம்பெறும் என்று பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றது.அந்தவகையில் பாஜக -அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க தமிழக மாநில தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் அடுத்தாண்டு பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பாஜக இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.