கைதி தப்பி ஓடிய விவகாரம்.. இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்- எஸ்.பி. அதிரடி!
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடிய நிலையில், காவலர்கள் இரண்டு பேரை அம்மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த மாதம் 30-ம் தேதி இரவில் இருந்து காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஏம்பல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அடுத்த மறுநாள் அந்த சிறுமியின் முகம், தலை உள்பட உடலில் பல்வேறு இடங்களில் காயத்துடன் கண்மாய் கரை புதரில் பிணமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரனை நடத்தினர்.
அந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த பூக்கடையில் வேலை செய்யும் ராஜா என்பவர் காளிகோவில் அருகே அந்த சிறுமியை அழைத்து சென்றதாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து ராஜாவை பிடித்து, காவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.
அப்பொழுது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ராஜா ஒப்புக்கொண்ட நிலையில், அவரை காவலர்கள் கைது செய்தனர். இன்று அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது ராஜா திப்பியோடினர். மேலும், தப்பியோடிய ராஜா பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமி கொலை செய்த வழக்கில் கைது செய்த குற்றவாளி ராஜா தப்பியோடிய நிலையில், காவலர்கள் முருகையன் மற்றும் கோகுல குமாரை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவளித்துள்ளார்.