நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வருவேன் – காவலர் சுனிதா யாதவ்
மீண்டும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வர விரும்புவதாகவும், முடியாவிட்டால் வழக்கறிஞராக மாறி மக்களுக்கு சேவை செய்வேன்.
குஜராத்தின் சூரத் நகரில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி காரில் ஊர் சுற்றிய அமைச்சரின் மகனை பெண் காவலர் சுனிதா யாதவ் அதிரடியாகக் கைது செய்தார். இதனையடுத்து, இவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திடீரென இவர் தான் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனையடுத்து, காவலர் சுனிதா, நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்ேடன். நான் எனது கடமையைத்தான் செய்தேன். அமைச்சரின் மகன் விதிமுறைகளைக் மீறியதால் கைதுசெய்தேன். ஆனால் எனது துறையின் உயர் அதிகாரிகள் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தான் மீண்டும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வர விரும்புவதாகவும், முடியாவிட்டால் வழக்கறிஞராக மாறி மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.