ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் கட்டாய விடுப்பு -ஏர் இந்தியா முடிவு ?

Default Image

ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா முடிவு  செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் ஆனது அண்மைக்காலமாகவே கடன் சுமையில் தத்தளித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.மேலும் அதன் பங்குகள் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் தான் ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக ஒரு செய்தி பறந்து வந்து.இது மக்கள் இடத்தில் அதிகவேகமாக பரவியது.

ஆனால் அதற்குள் தற்போது கொரோனா பரவி வரும் நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் மீட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா காரணமாக இந்தியாவில் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது படிப்படியாக விமான சேவை இயங்கி வருகிறது.

இந்த கொரோனா காலத்தில் விமானங்கள் சரிவர இயங்காத காரணத்தால் பல விமான நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கி வந்தது.இந்நிலையில் தான் ஏர் இந்தியா நிறுவனமும் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டாய விடுப்பு ஆண்டு5 கள் வரை நீட்டிக்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்