ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி கொடுத்த கெளதம் மேனன்..!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஷுவா இமை போல் காக்க படத்தின் வில்லனாக நடிகர் கிருஷ்ணா நடிப்பதாக அறிவித்து, #NaanUnJoshua என்ற செக்கன்ட் சிங்கிளை வெளியிட்டுள்ளனர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘ஜோஷுவா இமை போல் காக்க’. வருண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ராஹெய் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கார்த்திக் இசையமைக்கவுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார்.
தற்போது இந்த படத்திலிருந்து ‘நான் உன் ஜோஷுவா’ என்ற இனிமையான செக்கன்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் வரிகள் எழுத கார்த்திக் குரல் கொடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதனுடன் இயக்குநர் கௌதம் மேனன், நடிகரான கிருஷ்ணா தான் ஜோஷுவா படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவலையும் அறிவித்துள்ளார். கிருஷ்ணா அவர்கள் கழுகு, யாமிருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், தனுஷின் மாரி2 ல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் “திருக்குறள் ‘என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
https://t.co/qszYuoCIux
It’s also the time to introduce Krishna as the villain in the film Joshua.. Thank you @Actor_Krishna for agreeing to do this for me! In return, you are looking really good brother????— Gauthamvasudevmenon (@menongautham) July 16, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025