சுவையான வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி?
சுவையான வாழைப்பூ பொரியல் செய்யும் முறை.
நம்மில் அதிகமானோர் வாழைக்காயை கூட்டு செய்தோ, பொரியல் செய்தோ சாப்பிடிருப்போம். ஆனால்,பெரும்பாலானோர் வாழைப்பூவை பயன்படுத்தி எந்த உணவும் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள்.
தற்போது இந்த பதிவில், சுவையான வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப்
- பயாத்தம் பருப்பு – கால் கப்
- தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 2
- கடுகு – கால் தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு -அரை தேக்கரண்டி
- கடலை பருப்பு – அரை தேக்கரண்டி
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாழைப்பூவை சுத்தம் செய்து அதில் உள்ள ஜவ்வை நீக்கி வைக்க வேண்டும். பின் வாழைப்பூவுடன் மஞ்சள் தூள், உப்பு, பயத்தம் பருப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள வாழைப்பூ, பருப்பு கலவையை தண்ணீர் வடித்து சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக தேங்காயாய் துருவல் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்போது சுவையான வாழைப்பூ பொரியல் தயார்.