12-வகுப்பு தேர்வு முடிவுகள்! தேர்வு முடிவுகளை மாணவர்கள் இந்த இணைய பக்கத்தில் காணலாம்!
தேர்வு முடிவுகளை மாணவர்கள் இந்த இணைய பக்கத்தில் காணலாம்.
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 9:30 மணியளவில் மாணவர்கள் இணையத்தில் காணலாம் என்றும், மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 89.41%, மாணவிகள் 94.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை, tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதள பக்கங்களில் காணலாம்.