இங்கிலாந்தில் ஊரடங்கு காலத்தில் 10,0000 அதிகமானோர் புகைபிடிப்பதை கைவிட்டதாக ஆய்வில் தகவல்.!

Default Image

இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா காலத்தில் புகைபிடிப்பதை விட்டுள்ளார்கள் என கூறப்படுகிறது.

இந்த ஆய்வு ஏப்ரல் மாதத்தின் மத்தியில் இருந்து ஜூன் மாதம் இறுதி வரை நடத்தப்பட்ட காலகட்டத்தில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில்  16 முதல் 29 வயது வரையிலான 400,000 பேரும்,   50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 240,000 பேரும் . 30-49 வயதுடைய 400,000 பேரும் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டனர் என கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆய்வில் 440,000 பேர் புகை பிடிப்பதை கைவிட முயற்சி செய்துகொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.30 வயதிற்குட்பட்டவர்கள் பப்கள் மற்றும் மதுக்கடைகளில் நண்பர்களுடன் இருக்கும்போது புகைபிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இளைஞர்களைப் பொருத்தவரை பெற்றோரிடமிருந்து தங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை மறைத்து  புகைப்பிடிப்பார்கள் ஆனால், ஊரடங்கு காரணமாக அவர்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டிய சூழல் வந்ததால் புகைபிடிப்பதை கைவிட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும், புகைபிடிப்போரின் எண்ணிக்கை புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டவர்களின் விட ஐந்து மடங்கு அதிகம் என்ற உள்ளது என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்