யார் இந்த நடராஜன்?அவர் பற்றிய குறிப்பு இதோ …..

Default Image

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

யார் இந்த நடராஜன்? அக்.23, 1943-ம் ஆண்டில் தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில்  நடராசன் பிறந்தார். மாணவர் பருவத்தில் தமிழ் மீது நடராசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 1965 காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் பெரும் பங்காற்றினார். கல்லூரி காலத்தில் தஞ்சையில் மாணவர்களை திரட்டி போராட்டங்களை நடராசன் முன்னெடுத்து நடத்தியவர். மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அண்ணாவின் கவனத்தை நடராசன் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொடர்பு அதிகாரியானார் நடராசன்.

மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவை 1975-ல் நடராசன் திருமணம் செய்துகொண்டார். சசிகலா- நடராசன் திருமணத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

 
சந்திரலேகா மூலம் நடராசன்- சசிகலா தம்பதிக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. நடராசன் காலப்போக்கில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறிப்போனார். 1985-ல் நேரடி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக நடராசன் செயல்பட்டார். மேலும் அரசியலில் ஜெயலலிதா மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

கணவர் நடராசன் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் சசிகலா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கோரி சசிகலா இன்று மனு அளிக்க உள்ளார். நடராசனின் இறப்பு சான்றிதழை கொடுத்தவுடன் சசிகலாவுக்கு பரோல் தரப்படும் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்