தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் ?யாத்திரைக்கு அனுமதி ஏன்?
டி.டிவி தினகரன் வி.எச்.பி ரத யாத்திரையை அனுமதித்த தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது போன்ற கோரிக்கைகளுடன், விஸ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) ராமராஜ்ஜிய ரத யாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த ரதயாத்திரை நாளை காலை செங்கோட்டை வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது.
இந்த ரதயாத்திரையை தடை செய்யவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கூறியபோதும், இந்த ரதயாத்திரைக்கு தடை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வி.எச்.பி ரத யாத்திரையை அனுமதித்த தமிழக அரசுக்கு டி.டிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுத்த தமிழக அரசு, அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ரதயாத்திரைக்கு அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாரை திருப்திப்படுத்த ரதயாத்திரைக்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.