இனி பார்க்கிங் கட்டணம் செலுத்த “பாஸ்டேக்” முறையை பயன்படுத்தலாம்- NPCI அறிவிப்பு!

Default Image

 சுங்கக்கட்டணத்தை தொடர்ந்து, இனி விமான நிலையங்கள், மால்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்த பாஸ்டேக் முறையை பயன்படுத்தலாம்.

நாம் பலமுறை சுங்கச்சாவடியை கடந்திருக்கிறோம். அப்பொழுது “பாஸ்டேக்” எனஒரு தனி லைன் இருப்பதை அறிந்திருப்போம். அதன் விழியாக செல்லும் வாகனம், நிற்க்காமல் செல்லும். அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என ஒருபோதும் எண்ணி விடாதீர்கள்.

அவர்கள் “பாஸ்டேக்” என்ற கார்டை பயன்படுத்தி சுங்கக் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை இந்த முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும்.

அதன்பின், நமது வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து, நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதற்கு நாம் ரீசார்ச் செய்வது அவசியம்.

இந்த பாஸ்டேக் முறை அறிமுகமானதில் இருந்து, தற்பொழுது வரை பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் நாம் சுங்கச்சாவடியில் நிற்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இந்நிலையில் விமான நிலையங்கள், மால்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்த இந்த பாஸ்டேக் முறையை பயன்படுத்தலாம்.

டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய பெருநகரங்களில் உள்ள மால்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற தனியார் வாகன நிறுத்துமிடங்களில் பார்க்கிங் கட்டணத்தை செலுத்த ஃபாஸ்டேக்குகள் பயன்படுத்தக்கூடிய வகையில், இயங்கக்கூடிய முறையை அறிமுகப்படுத்துவதாக தேசிய கட்டணக் கழகம் (NPCI) தெரிவித்தது.

இந்த வசதி, முதலாவதாக ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள முக்கிய மால்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற தனியார் வாகன நிறுத்துமிடங்களில் இந்த சேவைகளுக்கு தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் NPCI COO பிரவீனா ராய் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்