#BREAKING: இன்று மாலை 6 மணி முதல் இன்ஜினீயரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்.!

பொறியியல் மாணவர் சேர்க்கை இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு காலதாமதமாகி உள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையும் தள்ளி போகிறது.

இதனால், தமிழகத்தில் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்..? என்று கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்தில், இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறுகையில்,  தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு விண்ணப்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார்நிலையில் உள்ளதாக கூறினார். மேலும், கலந்தாய்வுக்கு குறித்து வருகிற 15-ந்தேதி (அதாவது இன்று )  அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

இந்நிலையில், இன்ஜினீயரிங் கலந்தாய்விற்கு இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், அக்டோபர்  15-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்கவேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும்.

தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளன , மொத்த இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.