புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் பயில்வது மட்டும் கல்வி அல்ல.! உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு கமல் செய்த ட்வீட்.!
புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் பயில்வது மட்டும் கல்வி அல்ல, இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என கமல் ட்வீட் செய்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜூலை 15ம் தேதி உலக இளைஞர்கள் திறன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசியல் தலைவர்களும்,பிரபலங்களும் இளைஞர்களின் திறமையை குறித்தும், இன்றைய கல்வியை குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, நம்மை மேம்படுத்திடுவே கல்வி என்பதை மறந்து புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்தி கொண்டிருக்கிறோம். இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என இந்த உலக இளைஞர் திறன் தினத்தில் நினைவுறுத்துவோம். திறனறிந்து அதை வளர்த்திடுவோம் என்று சொல்ல இதை விட சிறந்த நேரமில்லை என்று கூறியுள்ளார்.
நம்மை மேம்படுத்திடவே கல்வி என்பதை மறந்து புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என இந்த உலக இளைஞர் திறன் தினத்தில் நினைவுறுத்துவோம்.
திறனறிந்து அதை வளர்த்திடுவோம் என்று சொல்ல இதைவிட சிறந்த நேரமில்லை.
— Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2020