சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்த காவலர்களை சாத்தான்குளத்திற்கு அழைத்து சென்று விசாரணை- சிபிஐ!
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்த காவலர்களை சாத்தான்குளத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கவுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான எஸ்.ஐ. ரகு கணேஷ், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முத்துராஜ் மற்றும் முருகன் ஆகியோரை சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரிக்கவுள்ளதாக சிபிஐ தெரிவித்தது.
அதில் தலைமை காவலர் முத்துராஜ், ஏற்கனவே சென்ட் சாத்தான்குளத்திற்கு அழைத்து சென்று விசாரித்த நிலையில், மற்ற நான்கு பேரையும் அழைத்து சென்று விசாரிக்கவுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.