இலங்கை அணி வீரர்களின் ஓய்வு அறைக்கு வந்து கவலைப்பட்ட கங்குலி.!
இலங்கை அணி வீரர்களின் ஓய்வு அறைக்கு வந்து கவலைப்பட்டதாக சங்ககாரா கூறியுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன் கோப்பையில் இரண்டு அணிக்கும் சமமாக கோப்பை அளிக்கப்பட்டது, இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனாக கங்குலி செயல்பட்டார், இலங்கை அணி சார்பாக சனத் ஜெயசூரியா கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில் அந்த போட்டியின் போது கங்குலிக்கும் ரசல் அர்னால்ட்டிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ரசல் அர்னால்ட் அடிக்கடி பிட்ச்சின் மீது அடிக்கடி ஓடியதால் கங்குலிக்க்கும் ரசல் அர்னால்ட்டிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, அதன் பிறகு சண்டையை நடுவர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி வைத்தனர், அதற்கு பிறகு கங்குலி இலங்கை அணியினரின் ஓய்வறைக்கு சென்று சங்ககாரா உள்ளிட்ட வீரர்களுடன் வருத்தத்துடன் பேசியதாகவும், இந்த சண்டை தன்னை இடை நீக்கம் செய்ய காரணமாக அமையும் என்று கங்குலி கூறியதாகவும் சங்ககாரா அண்மையில் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.