தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஜூலை -31 ஊரடங்கு அமலில் உள்ளது இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறையில் உள்ளது . இந்நிலையில் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும், சந்தேங்களை கேட்கவும் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மூன்று நாட்களுக்குள் அட்டவணை வெளியிடப்படும் எனவும் தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் 14 தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தக விநியோகம் தொடங்கியது. தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.