இரண்டு ரவுடிகளை கொடூரமாக கொலை… 11 பேர் கைது..!
திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு ரவுடிகளை கொடூரமாக கொலை செய்த 11 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்தவர் அலெக்ஸ் மற்றும் கணேசன் இவர்கள் இருவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் சங்கர் என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார், மேலும் இந்த கொலையில் அலெக்ஸ் மற்றும் கணேசன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது , இந்த நிலையில் சங்கர் கொலையை பழிதீர்க்க ரவுடிகள் கூட்டம் அலெக்ஸ் மற்றும் கணேசன் கொலை செய்ய அடிவாரம் பகுதிக்கு வந்துள்ளது .
இந்த நிலையில் அடிவாரம் அனதபுரம் பகுதியில் கணேஷ் இருசக்கர வாகனத்தில் அலெக்ஸுடன் வந்தார் அப்பொழுது தகவலறிந்த ரவுடி கும்பல் இருசக்கர வாகனத்தில் சென்ற கணேசனை நிறுத்த சொல்லி நிற்காமல் சென்ற கணேசன் மீது மிளகாய் பொடி தூவி கீழே விழவைத்து தலையில் மற்றும் கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு அலெக்ஸை அரிவாளால் வெட்டி தலை மீது கல்லை போட்டு கொன்ற உள்ளனர்.
இதனால் உயிருக்கு போராடிய கணேசன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தோடு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ,ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சக்திவேல், விவேக் ,ராகுல், சந்துரு, காளி, குணா,லீங்கேஸ்வரன், சாந்தகுமார், ஸ்ரீரிதர், மணி கண்டன் ஆகிய 11 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.