கொரோனாவிலிருந்து மீண்டவரா நீங்கள், அப்போ இதை செய்யுங்கள் – விஜய் சேதுபதி வேண்டுகோள்.!
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கி கொரோனா நோயாளிகளை காப்பாற்றுமாறு விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மருத்துவர்களும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மாவை கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு மாற்றி வைப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது பிளாஸ்மா நன்கொடை திட்டம் ஒன்றை திருச்சியை சேர்ந்த டாக்டர். அ. முகமது ஹக்கீம் என்பவர் ‘உயிர்த்துளி’ ரத்த மையத்துடன் இணைந்து தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் ஹக்கீம் அவர்கள் தொடங்கிய பிளாஸ்மா நன்கொடை திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி என்றும், கருணை மற்றும் பச்சாத்தாபம் என்பது தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலைகளில் முக்கியமான தேவை என்றும், நீங்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்கள் என்றால் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கி கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்களுக்கு உதவுங்கள். ஒரு குடும்பத்தை கொரோனாவிலிருந்து காப்பாற்ற நீங்கள் ஒரு காரணமாக இருங்கள் என்று கூறியுள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாவில் உள்ள ஆன்டிபாடிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற உதவும் என்ற முயற்சியை தொடங்கியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 14நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தற்போது அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள் நன்கொடை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
Happy to announce plasma donation program initiated by @drhakkim and Uyir Thuli Trichy. Kindness & empathy is the major need of the hour, if you are a #coronasurvivor please help the doctors fight corona by donating plasma. Be a reason a family survives #donateplasma pic.twitter.com/rJNb9qsGcl
— VijaySethupathi (@VijaySethuOffl) July 14, 2020