எல்லை விவகாரம்: இந்தியா-சீனா இடையே 15 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை ..!
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான கமாண்டர் மட்ட நான்காம் கட்ட பேச்சுவார்த்தை 15 மணி நேரம் நீடித்தது.
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், நேற்று இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான கமாண்டர் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் கிழக்கு லடாக்கிலுள்ள சுஷுல் பார்டர் பகுதியில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று காலை 11: 30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2 மணியளவில் முடிந்தது. இந்த பேச்சுவார்த்தை கூட்டம் 15 மணி நேரம் நீடித்தது. இது இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற நான்காவது வார்த்தைதையாகும். இதற்கு முன் நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரி மற்றும் டெப்சாங் பகுதிகளில் சீன இராணுவம் டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் கூடுதல் படைகளை அகற்றுவது குறித்து இந்த கூட்டத்தின் முக்கிய பேச்சுவார்த்தையாக இருந்தது என கூறப்படுகிறது.
கடந்த முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் ரோந்து புள்ளி -15 உள்ளிட்ட பிற புள்ளிகளில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திரும்பி வந்துள்ளன. மேலும், ஆயுதங்கள், படைகளை குறைப்பது குறித்து இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடைபெற்றது என கூறப்படுகிறது.