#BREAKING : மின்கட்டண உயர்வு -திமுகவினருடன் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

Default Image

நாளை காலை 10 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து,  மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது . பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்தது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கும் அநியாய உத்தரவை அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி இருப்பது பொறுப்பற்ற பொல்லாச் செயல் என்று தெரிவித்தார். பேரிடரைக் காரணம் காட்டி டெண்டர் விதிகளை மீறும் போது மின்கட்டணச் சலுகை மட்டும் அளிக்க முடியாதா?அதற்கு முதலமைச்சர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் வேண்டும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரம் குறித்து நாளை காலை 10 மணிக்கு காணொலியில் திமுக மாவட்ட செயலாளர், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்