மதுரையில் கொரோனா பாதிப்பு 7,000-ஐ தாண்டியது!
மதுரையில் கொரோனா பாதிப்பு 7,000-ஐ தாண்டியது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பில், தமிழகத்தில், சென்னை முதலிடத்தில் உள்ள நிலையில், தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதன் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.