கீர்த்தி சுரேஷிற்கு டப்பிங் பேசும் பிரபல நடிகை…!!

Default Image

நடிகை பானுப்ரியா தற்போது படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும், சின்னத்திரையில் சில வேடங்களை ஏற்றும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் நடிகைகளுக்கு டப்பிங்’கும் பேசி வருகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்த வகையில், தற்போது அப்படியொரு வாய்ப்பை ஏற்றிருக்கிறார். பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை படம், ‘நடிகையர் திலகம்’ பெயரில் உருவாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கிறார். மேலும் விஜய் தேவர கொண்டா, துல்கர் சல்மான், நாக சைதன்யா, பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, மாளவிகா நாயர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இதில் சாவித்ரி கதாபாத்திரத்தினை ஏற்று நடிக்கும் கீர்த்தி சுரேஷிற்கு பானுப்ரியா டப்பிங் செய்ய கமிட்டாகியுள்ளாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்