நாங்கள் வெளிநாட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதில்லை!ஷாகிப் பதிலடி …
இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரில் இறுதிப்போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசமைதானத்தில் கடந்த ஞாயிறு இரவு நடந்தது.
வங்க தேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக், களத்தில் இறங்கும்போது, 2 ஓவரில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. பவுன்டரி, சிக்ஸ்சர் என அடித்த தினேஷ், 19-வது ஓவரில் 6 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ரூபல் ஹுசைனை தெறிக்க விட்டார். 1 பந்துக்கு 5 ரன்கள் தேவை என்றபோது, மேட்ச் பார்த்துக் கொன்டிருந்தவர்கள் எல்லோரும், சீட்டின் நுனியில் உட்கார, தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து வெற்றிக்கனியை வசமாக்கினார்.
இதன் பின்னர் பேசிய வங்கதேச கேப்டன் ஷாகிப், நாங்கள் வெளிநாட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதில்லை. அதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. ஆதரவு அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இப்படியெல்லாம் நடக்கும். யார் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. களத்தில் நல்ல கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று ஆதரவு தேவையில்லை என்ற பாணியில் பேசினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.