இன்ஜினீயரிங் கலந்தாய்வு எப்போது.? இன்று அறிவிப்பு.?
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு காலதாமதமாகி உள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையும் தள்ளி போகிறது.
இதனால், தமிழகத்தில் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்..? என்று கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
சமீபத்தில், இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறுகையில், தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு விண்ணப்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார்நிலையில் உள்ளதாக கூறினார்.
மேலும், கலந்தாய்வுக்கு குறித்த வருகிற 15-ந்தேதி (அதாவது இன்று ) அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில், இன்று இன்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வு விண்ணப்பிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.