என்னை பற்றி கீழ்த்தரமாக பேசாதீர்கள் – வனிதா கண்ணீர் மல்க பேட்டி!
என்னை தவறான வார்த்தைகளால் பேசாதீர்கள், எனது மகள்களுடன் வெளியில் செல்லவே பயமாக உள்ளது என நடிகை வனிதா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பிரச்சனை உலகத்தையே ஆட்டி படைத்து வரும் நிலையில், தற்பொழுது இந்தியா முழுவதும் வெடித்துள்ள பிரச்சனை வனிதாவின் திருமணம் தான். முறையாக விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவருடன் இவர் திருமணம் செய்துகொண்டதற்கு பீட்டர் பாலின் மனைவி நியாயம் கேட்டு மீடியாவுக்கு வந்ததால் அவருக்கு சாதகமாகவும், வனிதாவுக்கு எதிராகவும் பலர் பேசி வந்தனர்.
அவர்களில் முக்கியமான புள்ளிகள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சூர்யா தேவி. இந்நிலையில் அதிக மன அழுத்தத்தால் காவல் நிலையம் சென்று இவர்கள் மீது புகார் அளித்துள்ளார் வனிதா. தற்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வனிதா, சூர்யா தேவி மிக தவறான வார்த்தைகளால் என்னை விமர்சித்து பேசுகிறார். நான் தனியாக எனது மூன்று குழந்தைகளை வளர்த்து வருகின்றேன்.
எனது குடும்ப ஆதரவு இல்லாததால் அதிகளவில் என்னை காயப்படுத்துகிறார்கள், என்னை தவறான வார்த்தைகளால் பேசாதீர்கள். தனிமையாக இருக்க முடியாது என 40 வயத்துள்ள நான் எடுத்துள்ள முடிவில் ஏற்பட்ட சின்ன சிக்கலை பெரிதாக்காதீர்கள். உண்மை என்ன என்பதை அறியாமல் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். என் இரு பெண் குழந்தைகளுடன் வெளியில் செல்லவே பயமாக உள்ளது, என வனிதா கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.