ராஜஸ்தான் அரசியல் விவகாரம் , பாஜக நடத்தும் நாடகம் – முதல்வர் அசோக் கொலோட்
ராஜஸ்தானில் நடக்கும் அரசியல் குழப்பங்களின் பின்னால் பாஜக இருக்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.கடந்த சில நாட்களாக முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.இதனால் 30 எம்.எல்.ஏ. ஆதரவு தனக்கு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் அறிவித்தார்.
எனவே நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.ஆனால் இந்த கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்தார்.இருந்தாலும் சச்சின் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.இதற்குஇடையில் தான் இன்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திலும் சச்சின் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.இதனால் தான் இந்த கூட்டத்தில் இவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன் பின் துணை முதலமைச்சர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் அவருடன் இருக்கும் விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
எனவே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா (Kalraj Mishra )-வை நேரில் சந்தித்து சச்சின் பைலட் ,விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா நீக்கம் குறித்து தெரிவித்தார் .இதற்கு ஆளுநரும் ஒப்புதல் தெரிவித்தார்.ஆளுநரை சந்தித்த பின்னர் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கொலோட் செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில், ராஜஸ்தானில் நடக்கும் அரசியல் குழப்பங்களின் பின்னால் பாஜக இருக்கிறது. ராஜஸ்தான் மாநில அரசியல் விவகாரம் என்பது பாஜக நடத்தும் நாடகம் தான்.பாஜகதான் அந்த சொகுசு விடுதியை ஏற்பாடு செய்தது, அனைத்தையும் நிர்வகிப்பது பாஜகதான் என்று தெரிவித்துள்ளார்.