கொரோனாவிற்காக தமிழகத்தில் 3 மாதங்களில் ரூ.10,000 கோடி ரூபாய் செலவு- அமைச்சர் பாண்டியராஜன்
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 3 மாதங்களில் ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில்நேற்று 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,42,798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 3,035 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவில் இருந்து 92,567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
இந்நிலயில் சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 3 மாதங்களில் ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.