போலி டிக் டாக் ப்ரோ செயலி – எச்சரிக்கும் மகாராஷ்டிரா சைபர் செல்!

Default Image

டிக் டாக்குக்கு பதிலாக போலி முகவரியாக உருவாகியுள்ள டிக் டாக் ப்ரோ செயலியை எச்சரித்துள்ளது மகாராஷ்டிரா சைபர் செல்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கடந்த சில வாரங்களுக்கு 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா. இதில் மக்களால் அதிகளவு உபயோகப்படுத்தப்பட்டது டிக் டாக் செயலி தான். இதனை இழந்து வருத்தத்தில் தவித்த டிக் டாக் பயனாளர்களை வைத்து மோசடி கும்பல் ஒன்று தனக்கு சாதகமான திட்டத்தை தீட்டியுள்ளதாம்.

அதாவது பிளே ஸ்டோரில் இல்லாதா டிக் டாக் செயலுக்கு மாற்றாக டிக் டாக் ப்ரோ வெர்சனை மற்ற பிரௌசர்கள் மூலமாக பயனாளர்களுக்கு வழங்கி அதன் மூலம் அவர்களது ரகசிய தகவல்களை திருடுகிறதாம். இது மிகவும் தவறானது செயலியின் மீது இருக்கும் பிரியத்தால் இதனை தரவிறக்கம் செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள் என மகாராஷ்டிரா சைபர் செல் எச்சரித்துள்ளது. மேலும், Apk செயலிகளை தரவிறக்கம் செய்வதையும் தவிர்க்குமாறு கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்