#யூ டியூப் செனல் தடையா??- கருப்பர் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்பு!
கருப்பர் கூட்டம் என்ற,யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று காவல்துறையில் பல்வேறு அமைப்புகளால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது குறித்து அளித்துள்ள புகார்:
நாத்திக கருத்துகளை பரப்புவது போன்று சிலர், ‘கருப்பர் கூட்டம்’ என்கிற பெயரில், ‘யூ டியூப் சேனல்’ நடத்தி வருகின்றனர்.அதில் ஆபாச புராணம் என்கிற பெயரில் புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து இது போன்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
19ம் நுாற்றாண்டில் தமிழ் கடவுளான முருகப் பெருமானை போற்றி, கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டு உள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, இவ்வாறு அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது,மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
என்வே அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், ஹிந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்தும் குறிக்கோளாகவே உள்ளது. மேலும் மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. ‘
இதே போல் ஹிந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் செந்தில் புகார் அளித்துள்ளார்: அவரும் கருப்பர் கூட்டம், யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் ஹிந்து கடவுளை இழிவுபடுத்தி பிரசாரம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து முன்னணியும் தெரிவித்துள்ளது.
இதே போல ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இது அறிக்கை வெளியிட்டுள்ளார் :
கடவுள் மறுப்பு என்கிற பெயரில், ஹிந்து மத நம்பிக்கைகளை, தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன், ‘கறுப்பர் கூட்டம்’ என்ற, ‘யூ டியூப்’ பதிவு ஒன்றில், ஒருவர், முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் இழிவுபடுத்தியது மட்டுமின்றி ஹிந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துகளை பரப்பி உள்ளார். இதை, ஹிந்து முன்னணி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் மீதும், அதற்கு பின்னணியில் இயங்கும் நபரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அவர் கூறியுள்ளார்.மேலும் இந்த கருப்பர் கூட்டம் மீது பல்வேறு வழக்குகள் பிற மாவட்டங்களிலும் பதியப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் கருப்பர் கூட்டத்திற்கு எதிராக டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் #வெற்றிவேல்_வீரவேல் என்ற ஹேஸ்டெக் இந்திய அளவில் ட்ரண்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.