உங்கள் பிரசவத்திற்கு பின் உங்களிடம் உங்கள் கணவர் எதிர்பார்க்கும் 5 விடயங்கள்!

Default Image

உங்கள் பிரசவத்திற்கு பின் உங்களிடம் உங்கள் கணவர் எதிர்பார்க்கும் 5 விடயங்கள்.

திருமணமான பெண்கள் குழந்தை பிறந்த பின்பு, தங்களது கணவருடன் உள்ள உறவில் நெருக்கம் குறைவார்த்துண்டு. அவர்களின் அனைத்து கவனமுமே, குழந்தையின் பக்கமாக திரும்பி விடும்.

தற்போது இந்த பதிவில், பிரசவத்திற்கு பின் உங்கள் கணவர் உங்களிடம் எதிர்பார்க்கும் 5 விடயங்கள் பற்றி பார்ப்போம்.

நெருக்கமான உறவு 

பெண்கள் தங்களுக்கு குழந்தைகள் பிறந்த பின், தங்களது கணவருடனான உறவில் சற்று விலகி இருப்பதுண்டு. அவர்களது முழு கவனமும் குழந்தையின் பக்கமாக திரும்பி விடும். ஒரு பெண் கருவுற்ற நேரத்திலிருந்து, அந்த கருவை பிரசவிக்கும் நாள் வரை அவரை அவரது கணவர் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வதுண்டு.

எனவே, கணவரை பொறுத்தவரையில் குழந்தை பிறப்பிற்கு பின்னும், மனைவி தன்னுடன் பேச வேண்டும். நேர செலவிட வேண்டும் என விரும்புவதுண்டு. கணவனின் விருப்பத்தை கருத்தில் கொண்டவர்களாக பெண்கள், தங்களது கணவருக்காகவும் நேரத்தை செலவிட வேண்டும்.

உடல் அழகு 

பெண்களை பொறுத்தவரையில், குழந்தை பிறந்த அவர்களது உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதனால், அவர்கள் தங்களது உடலின் அழகு குறைந்து விட்டதாக எண்ணலாம்.

ஆனால், ஆண்களை பொறுத்தவரையில் அவர்கள் அப்படி நினைப்பதில்லை. மாறாக, தாய்மையால் நீங்கள் பெற்ற அழகினையும், அவருக்கு அப்பா என்ற பதவியையும் அளித்த உங்களை எண்ணி மகிழ்ச்சி கொள்வார்.

பாராட்டுதல் 

பொதுவாக ஆண்களை பொறுத்தவரையில், பெண்கள் கர்ப்பமான நாள் முதல் கொண்டு, அவர்கள் பிரசவிக்கும் நாள் வரை வீட்டின் வேலைகளை பார்ப்பது என உங்களுக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பார். கணவரின் உதவியை எண்ணி நீங்கள் பெருமை கொண்டாலும், உங்கள் வாயில் இருந்து வரும் ஒரு சிறிய பாராட்டுக்காக தான் அவரது மனம் ஏங்கி இருக்கும்.

தனிமை 

பெண்கள் கர்ப்பமான நாள் முதல் கொண்டு, அவர்கள் பிரசவிக்கும் நாள் வரை உங்களுக்கு உதவியாக இருந்த உங்களது கணவர், ஆழ்ந்த யோசனையிலோ, படித்துக் கொண்டோ அல்லது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ இருந்தால், அவரை தொந்தரவு செய்யாமல், அவருக்கான ஒரு தனி இடத்தை அளிக்க வேண்டும் என அவர்கள் விரும்புவது உண்டு.

பணம் 

பொதுவாக குழந்தை பிறப்புக்கு பின், குடும்பத்தில் தேவைகள் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில், செலவுகளை அதிகமாக செய்யாமல், சிக்கனமாகவும், புத்திசாலிதனமாகவும் செயல்பட்டு, குடும்பத்தை நடத்த கற்றுக் கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
E-pass
sunita williams
ashwani kumar HARDIK
Commercial cylinder price
ashwani kumar
MI vs KKR - IPL 2025 (1)