உங்களுக்கு தைராயிடு பிரச்சனை உள்ளதா? இப்பிரச்சனை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத உண்மைகள் இதோ!
தைராயிடு பிரச்னை பற்றி நாம் இதுவரை அறிந்திராத உண்மைகள்.
தைராயிடு என்பது கழுத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி ஆகும். இந்த சுரப்பி உடலில் பல முக்கியமான பணிகளை செய்கிறது. ஆனால், தற்போதுள்ள நாகரீகமான சமூகத்தில், மோசமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், தைராயிடு பிரச்சனை இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகிறது.
நமது உடலில் தைராயிடு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தைராயிடு சுரப்பியில் இரு விதமான பிரச்சனைகள் வரக்க்கூடும். அவை ஹைப்பர் தைராயிடு மற்றும் ஹைப்போ தைராயிடு.
தைராயிடு பிரச்சனை யாருக்கு வரும்
கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம். இப்பிரச்சனை பரம்பரை வழியாகவும் வரலாம். பொதுவாக இந்த பிரச்னை பெண்களுக்கு தான் அதிகமாக காணப்படும்.
ஹைப்பர் தைராயிடு
ஹைப்பர் தைராயிடு என்பது, தைராயிடு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராயிடு ஹார்மோன்கள் சுரப்பது ஆகும். தற்போது இதற்கான அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.
அறிகுறிகள்
- அதிகமான வியர்வை.
- அடிக்கடி தும்மல் வருதல்
- நினைவாற்றலில் ஏற்படும் பிரச்னை.
- எதிலும் முழுமையான கவனம் செலுத்த இயலாத நிலை.
- குடலியக்கத்தில் ஏற்படும் மோசமான நிலை.
- உடலில் ஏற்படும் படபடப்பு.
- அதிகமான மனஅழுத்தம்.
- எடை குறைந்து காணப்படுதல்.
- மாதவியின் ஏற்படும் பிரச்சனை.
- உடலில் ஏற்படும் அதிகமான சோர்வு.
ஹைப்போ தைராயிடு
ஹைப்போ தைராயிடு என்பது தைராயிடு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராயிடு ஹார்மோன் சுரக்கப்படாத நிலை ஆகும். இதற்கான அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.
அறிகுறிகள்
- நகங்களில் வெடிப்பு ஏற்படுதல்.
- கழுத்தின் முன் பகுதியில் ஏற்படும் வீக்கம்.
- அதிகப்படியான களைப்பு.
- நினைவாற்றலில் ஏற்படும் பிரச்னை.
- சருமம் மற்றும் தலைமுடியில் காணப்படக் கூடிய வறட்சியான நிலை.
- மனதளவில் காணப்படும் இறுக்கம்.
- உடல் பருமன் மற்றும் தசை பிடிப்புகள்.
- மலசிக்கல் பிரச்னை
- மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய சீரற்ற இரத்த போக்கு.