ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய மனு! உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்! உச்ச நீதிமன்றம்அனுமதி!
ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய மனு.
மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு எழுதும் நடைமுறை அமலில் உள்ள நிலையில், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் போதிய இடங்கள் கிடைப்பது இல்லை என்றும், இடஒதுக்கீடும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்றும் குற்றசாட்டுகள் எழுந்தது.
இது தொடர்பாக, அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனையடுத்து, இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், ஓபிசி மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் தமிழக அரசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.