முத்தம் கொடுபதினால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது@!! ஆய்வில் தகவல்

முத்தம் எனப்படுவது உங்கள் காதலை வெளிப்படுத்தும் ஒரு செயல் என்று தானே நினைத்துக் கொண்டிருப்பீர்கள்? அது உண்மைதான். ஆனால் அதையும் தாண்டி புனிதமான….. சில விஷயங்கள் அதில் பொதிந்துள்ளது. மருத்துவ ரீதியாகவும் முத்தம் சில பல ரசாயன மாற்றங்களை உங்கள் உடலுக்குள் நிகழ்த்துகிறது. அப்படியான முத்தத்தைப் பற்றி சில ஜாலியான தகவல்கள் இதோ.
சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 20,160 நிமிடங்கள் (இரண்டு வாரங்கள்) முத்தமிடுவதற்கு செலவு செய்கிறார்கள் என்கிறது ஒரு முத்தான ஆராய்ச்சி.
 தாய்லாந்தைச் சேர்ந்த காதல் ஜோடிகளான இக்காசாய் மற்றும் லக்ஷனா திரானாரத் இருவரும் தான் நீண்ட நேரம் முத்தமிட்ட அந்தப் பெருமைமிகு சாதனையாளர்கள். அவர்களின் முத்த நேரத்தை கணக்கிட்டவர்களே மயங்கி விடும் அளவுக்கு 58 மணி நேரம் 35 நிமிடங்கள், 58 நொடிகள் அவர்கள் இதழ்கள் இணைந்திருந்தன. 
காதலையும் அன்பையும் வெளிப்படுத்தும் முத்தம், உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும், முத்தம் ஒரு வலி நிவாரணி. முத்தமிடும் போது நொடிக்கு மூன்றிலிருந்து நான்கு கலோரிகள் வரை உங்கள் உடலில் எரிக்கப்படுகிறது. இன்னும் பல பல உடல் மற்றும் மனம் சார்ந்த நலன்கள் முத்தத்தால் கிடைக்கிறது என்கிறது ஆய்வு.

நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள், முத்தம் என்பது உதடு சார்ந்த செயல் மட்டும்தான் என்று. ஆனால் உண்மையில் முத்தமிடும் போது, உங்கள் உடலின் 146 தசைகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் முகத்தில் உள்ள 34 தசைகளும் 112 புற தசைகளும் செயல்படுகிறதாம்.

ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒனூர் குன்டூர்குன் என்பவர் ஒரு மகத்தான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அதாவது அமெரிக்கா, ஜெர்மனி, துருக்கி போன்ற நாடுகளில் பொது இடங்களில் முத்தமிட்டு மகிழ்ந்த 224 ஜோடிகளைப் பற்றிய ஆராய்ச்சி அது. முத்தம் இடுகையில் மூன்றில் இரண்டு சதவிகித ஜோடிகள் தலையை வலதுபுறமாக சாய்த்து முத்தமிட்டனராம். இடது புறம் சாய்த்து நீங்கள் முத்தமிடுபவராக இருந்தால் நீங்கள் அந்த மற்ற ஒரு சதவிகிதத்தைச் சேர்ந்த அபூர்வ பிறவி என்கிறார் ஒனூர்.
உங்களுக்கு முத்தம் சார்ந்த விஷயங்களில் அதீதமான ஈர்ப்பு இருக்கிறதா. சதா உங்கள் துணையை முத்தமிட்டுக் கொண்டா இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. இதற்கெல்லாம் காரணம் உங்கள் ஹார்மோன்கள் தான். முத்தமிடும் போது உடலிலிருந்து அட்ரீனலின் மற்றும் நோரடனினலின் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கிறது. அப்போது உங்கள் இதயத் துடிப்பு அதிகரித்து, சில ரசாயன மாற்றங்கள் நிகிழ்ந்து உடலுக்கு புத்துணர்ச்சியும் ஆற்றலும் கிடைக்கிறது. .மேலும் நீங்கள் முதல் முதலாக ஒருவரை முத்தமிடுவது என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பேரானுபவம். முதல் முத்தத்தின் போது பெரோமோன்ஸ், டொபமைன், நோர்ப்பின்ப்ரின் மற்றும் சிரோட்டினின் ஆகிய மூளையின் மகிழ்வுப் பகுதியை தூண்டும் ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்கின்றன. இதனால் இதயம் வேகமாக துடிக்கும், இந்நிலையில் உடலில் மற்றும் மனத்தில் மகிழ்ச்சி அலையை உருவாக்கி மீண்டும் மீண்டும் முத்தமிடும் ஆவலை உங்களுக்குள் விதைத்துவிடும். இதுவே முத்தத்தின் உள்ளார்ந்த ரகசியம்.
இப்படி உடலுக்குள் நிகழும் வேதியல் விஷயங்களை தெரிந்தோ தெரியாமலோ கோடிக்கணக்கான உயிர்கள் தினம் தினம் முத்தத்தில் திளைக்கிறார்கள். 
author avatar
Castro Murugan

Leave a Comment