அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் புகைப்படத்தை வெளியிட்ட ஜான் சினா..!
அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப்ஜன் மற்றும் அவருடைய மகன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகனும் பாலிவுட் முன்னணி நடிகருமான அபிஷேக்பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.
இருவரும் தற்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற வேண்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் விரைவில் குணமடைய சினிமாவை சேர்ந்த அணைத்து பிரபலங்களும் பிராத்தனை செய்து வருகின்றார்கள் அந்த வகையில் அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப்ஜன் மற்றும் அவருடைய மகன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram