பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகானுக்கு (72) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர், லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், இந்திய அணிக்காக சேட்டன் சவுகான் 1969 முதல் 1981 வரை விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.