மதிப்பே இல்லை காங்., பைலட் விவகாரம்-சிந்தியா சீரல்
காங்கிரஸ் கட்சியில் திறமை மதிப்பு இல்லை , மரியாதையும் இல்லை என்று ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் விவகாரம் குறித்து ஜோதிராதித்யா சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
காங்., துணை முதல்வர் சச்சின் பைலட் மேலும் அவர் தன் ஆதரவு, எம்.எல்,ஏக்களுடன் பா.ஜ.வில் இன்று இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் காங்., கட்சியில் சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்தவரும், சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தவருமான ஜோதிராதித்யா சிந்தியா கருத்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்:
ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டால் ஓரங்கட்டப்பட்டார். என்னைப்போல எனது நண்பர் துன்பப்படுவதை பார்க்க வருத்தமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் திறமைக்கும் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. என்பதையே இது காட்டுகிறது என்று பதிவிட்டு கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரசை விட்டு விலகி ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடன் 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் அங்கு கமல்நாத் அரசு கவிழ்ந்து பா.ஜ.க. அரசு ஆட்சியமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.